Posts

Showing posts from July, 2016

நட்பின் காவ்யம்

                                       உக்கிரமான பொழுதுகளில் உலரும் நட்பின் ஈரத்தை உப்பங்களத்திலாவது சேமித்து வைப்பது குறித்து உணர்ந்து கொள்ளச் சொல்கிறாய் . தனித்த முக்கியத்துவ மேதுமற்ற நூற்றிலொன்றாய் துரியோதன இருக்கையைக் கூடக் கைப்பற்றவியலாத துரதிர்ஷ்டத்தின் தொடக்கத்தில் எண்ணங்கொள்ள யாதிருக்கக் கூடும் . பல தசம் கடந்த வேதோ ஓர் எண்ணில் இடம் பிடித்தவனைக் கடக்கும் சிறு பொழுதினையும் தவற விடில் என்ன எழுதிவிட முடியும் குறிப்பாக . காவ்யத்தின் வரிகளில் ராமனும் சீதையுமாகவே யாவரும் இருக்கவியலாது தான் . இரத்தம் சொட்டச் சொட்ட இறக்கைகளைப் பிய்த்துப் போட்டபடி பெரு வெளிப்பயணம் கொள்ளும் ஜடாயு ஒரு நாள் இறக்கைகளோடு சேர்த்து உயிர்ப்பூவையும் உதிர்த்துவிட்டு உடலம் கீழே விழும் உச்சகட்டத்தின் முன் அத்தியாயத்தில் தொடர்பு எல்லைக்கு வெளியில் இருந்தபடி அடுத்த காட்சிக்கான

தேர்வு

                                                                            தேர்வு பகிரியில் உனக்கு வணக்கம் சொன்னவர்கள் குறித்து பரிகாசம் செய்கிறாய் உன்மொழி தெரியாமல் தொடர்பில் வரும் அவர்களின் அறியாமை குறித்து அதிருப்தி கொள்கிறாய் . பொறுக்க்வியலாமல் பொது வெளியில்   பதிவு செய்கிறாய் . மேன்மைமிகுமுன் மொழியினைப் பிரகடனப் படுத்துகிறாய் . உன் நுட்பமான சல்லடைத் துவாரத்தின் வழி சலிக்கத் தொடங்கும் போதில் எதன் பொருட்டோ பலரைக் கழிக்கிறாய் எதன் பொருட்டோ சிலரை இணைக்கிறாய்   சலித்ததில் .