Posts

Showing posts from February, 2017

பிகே என்கிற பேச்சுக்காரன்

Image
                   பிகே என்கிற பேச்சுக்காரன்                  ------------------------------------------------------ (09-08-2016 அன்று ’இலக்கிய வீதி’, நிகழ்வில் பாரதிகிருஷ்ணகுமார் ஆற்றிய உரையைச் செவிமடுத்தவனாய்)                                                                                                 -- தமிழ்மணவாளன்                                      க டந்த 09-08-2016 அன்று இலக்கிய வீதி சார்பாக சென்னை பாரதியவித்யாபவனில் தொ.மு.சி. ரகுநாதன்- மறுவாசிப்பு என்னும் இலக்கியச் சொற்பொழிவு நடந்தது. நிகழ்வில் கலந்து கொண்டு தமிழின் மிகச்சிறந்த சொற்பொழிவாளர்களில் ஒருவரான பாரதிகிருஷ்ணகுமார் கலந்து கொண்டு உரையாற்றினார். அரங்கம் நிரம்பியிருந்தது. நிரம்பியிருப்பது முக்கியமல்ல. இருந்தவர்கள் அனைவரும் செவிகளைத்தவிர எல்லாவற்றையும் ஸ்விட்ச் ஆஃப் செய்து வைத்திருந்தனர் என்பது தான் சிறப்பு. திறந்து வைத்த செவிகளோடும் தீவிரமான ஈடுபாட்டோடும் பெற்றுக் கொள்ளும் பேரவாவோடும் நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் எதிரில் இருக்க, திருவிழாக் கூட்டத்தையே பேசத்தொடங்கும் கணத்தில் கட்டுக்குள் கொண்டு வரக் க

கவி நுகர் பொழுது-5 நூல் விமர்சனம்

Image
                            கவி நுகர் பொழுது                                                                                               ( ஈழவாணியின் ,' மூக்குத்திப்பூ ', கவிதை நூலினை முன்வைத்து ) ச மகாலக் கவிதைகளைத் தொடர்ந்து வாசிக்கிறபோது, வடிவம் சார்ந்தும் உள்ளீடு சார்ந்தும் பல்வேறு விதமான கவிதைகள் எழுதப்படுவதை அறியமுடியும் . ஒவ்வொருவருக்கும் வாய்க்கும் வாழ்க்கைச் சூழல் அவருக்கான படைப்பின் கருவைத் தீர்மானிக்கிறது ; அல்லது தீர்மானிக்கும் உந்துதலைத் தருகிற ‌ து . ஈழவாணியின் , ' மூக்குத்திப் பூ ', தொகுப்பை வாசிக்கக் கிடைத்த வாய்ப்பின் பின் , அதன் மீதான எனது கருத்துகளைப் பதிவு செய்ய விரும்புகிறேன் . முதலில் , இதில் உள்ள கவிதைகளில் கணிசமானவை ஏற்கனவே, இதற்கு முன்னர் வந்த இவரின் தொகுப்புகளில் இடம்பெற்றவை.அவற்றிலிருந்து, ‘மூக்குத்திப்பூ’, என்னும் இத்தொகுப்பில் எடுத்தாளப்பட்டுள்ளன . இதைக் குறிப்பிடுவதற்கான காரணம் , இக்கவிதைகள் எழுதப்பட்ட காலம் பல ஆண்டுகளைக் கொண்டது என்பதைச் சொல்வதற்காகவே. இந்நூலுக்கு