Posts

Showing posts from December, 2017

’கண்ணாடி நகரம்’

Image
(ஜெய தேவனின், ’கண்ணாடி நகரம்’ நூலினை முன் வைத்து) ஜெயதேவன், வெகுகாலமாக கவிதையில் இயங்கி வருபவர். காலந்தோறும் மாறிவரும் கவிதைப் போக்கிலிருந்து விலகி நின்று விடாமல் உடன்  வருபவர். கவிதைகளின் திசைவழிப் பயணத்தில் உற்சாகமாய்ப் பயணிப்பவர். அவரின் அண்மைத் தொகுப்பு,’ கண்ணாடி நகரம்’. கவிதைத் தொகுப்புக்கு முன்னுரை பெறுவது இயல்பானது. ஒன்றுக்கும் மேற்பட்டவர்களிடம் முன்னுரை எழுதச் சொல்வதும் உண்டு. இத்தொகுப்பிற்கு, யவனிகா ஸ்ரீராம், தேவேந்திர பூபதி, அமிர்தம் சூர்யா, சக்தி ஜோதி ஆகிய நான்கு பேர் முன்னுரை வழங்கியிருக்கிறார்கள். சிறப்பு என்னவெனில், கவிதைகளைப் பிரித்து ஒவ்வொரு பகுதிக்கும் ஒவ்வொருவர் முன்னுரை எழுதியிருக்கிறார்கள். இது புது உத்தி. பயன் யாதெனில் ஒரே கவிதையை ஒன்றுக்கும் மேற்பட்டோர் பேசவோ மேற்கோள் காட்டவோ இயலாதவண்ணம் அமைவது. ஜெயதேவன், சமகால அரசியலைத் தன் கவிதைகளின் பாடுபொருளாகக் கொண்டிருப்பது கவனிக்கத்தக்கது. உள்நாட்டு அரசியல் மட்டுல்லாது உலக வல்லாதிக்கத்தின் எதிர் குரலாக எழுதுகிறார். இன்றைக்கு, வளரும் நாடுகளின் பொருளாதாரத்தினை முடிவு செய்வது அமெரிக்க ஏகாதிபத்தியம். உலக வர்த்தக

மரத்தின் நிழல்’

Image
( செஞ்சி தமிழினியனின்,’ மரத்தின் நிழல்’, ஹைக்கூ நூலினை முன் வைத்து)                            ஆரம்ப காலத்தில் ஐக்கூ கவிதை ஒக்கூ (hokku, ஃகொக்கூ ) என்றே அழைக்கப்பட்டது . பின்னர் ஐகை என்று திரிந்து ஐக்கூ என்றாயிற்று . ஐக்கூ என்றால்   அணுத்தூசி   போன்ற சிறிய கவிதை என்று பொருள் கூறுகின்றனர் . இக்கவிதையின் பெயரை ஹொக்கு என்று பாரதியார் தன் கட்டுரையில் குறிப்பிட்டுள்ளார் ஜப்பானிய மொழியில் தோன்றிய ஐக்கூ, 5-7-5 என்னும் அசையமைப்புடையதாக, ஜென் (Zen) தத்துவத்தை விளக்குவதற்கும் இயற்கையைப் போற்றுவதற்கும் பயன்பட்டது. தமிழிலக்கியத்தில் இவ்வடிவத்தில் அமைந்த கவிதைகள் சமூக விமர்சனத்திற்கும் சமூகக் கேடுகளைச் சாடுவதற்கும் பெரிதும் பயன்படுகிறது எனலாம். ”தமிழ் ஹைக்கூவிலும் முருகியல் படைப்பாளிகள், சமுதாயப் படைப்பாளிகள், வாழ்வியல் படைப்பாளிகள், பெரியாரியப் படைப்பாளிகள், தலித்தியப் படைப்பாளிகளுண்டு. சமூகப் பார்வையோடு படைக்கப்பட்ட ஹைக்கூ கவிதைகளே அதிகம் பேசப்படுகின்றன..இதனை நன்குணர்ந்த கவிஞர் செஞ்சி தமிழினியன்”மரத்தின் நிழல் என்னும் தமது நூலினை அழகுறப் படைத்துள்ளார்.”, என்று

அசரிரீ சொன்ன பொய்

Image
கவிதை வாசிப்பது என்பது இடையறாத ஒரு பணியாக செய்து வருபவன் என்னும் வகையில், பல்வேறு பட்ட வகைமைகளை எதிர் கொள்வதும் அவற்றினூடாக பயணிப்பதும் அவை உருவாக்கும் மனச்சலனங்களை கிரகிப்பதும் சுகமான கவிதானுபவம், ஆய்வுக்காக, சில நூறு சம காலக் கவிதைத் தொகுப்புகளை வாசித்தேன். மேற்கோள்களுக்கு எடுத்ததன்றி அவற்றில் இருந்த கவிதைகள் குறித்து பதிவேதும் செய்ய வில்லை. பின்னர் ,கவிநுகர் பொழுது தொடருக்காக வாசித்து, எழுதி வருகையில், விஜேந்திராவின்,’அசரீரி சொன்ன பொய்’, தொகுப்பு குறித்து வெகு முன்னரே எழுதியிருக்க வேண்டும். ஏனோ, ’கவிநுகர் பொழுது’, நூலாக வெளிவரும் இத்தருணத்தில் தான் எழுத வாய்த்திருக்கிறது. இதுவே ’கவிநுகர் பொழுது’,தொகுப்பின் நிறைவுக்கட்டுரையாகவும் அமைகிறது. காலத்தின் வெளிகளில் கைவீசி நடக்கும் வாழ்வின் இயக்கம் 360 டிகிரிக்குமாக  அமையும் வட்டத்தில், பயணத்தின் திசையைத் தீர்மானிப்பது காலமா? வெளியா? வெறுமனே இயக்கமாய் அறியப்படும் பௌதீக நகர்தலா? ஏதேனும் அணுகுமுறைச் சாத்தியத்தை உறுதிப்படுத்தும் கட்டளைகள் உண்டா? குரல்கள் கேட்பது செவிகளினாலெனில் பிறிதொன்றின் தன்மை யாது? பிறிதொன்று என்பதே யாது? அந்தக்