Posts

Showing posts from May, 2018

இன்குலாப் என்னும் பொதுவுடைமைக் கவிஞன்

Image
இ லக்கியம் காலத்தின் கண்ணாடி.இலக்கியத்தின் வாயிலாக சமூகத்தின் நிலையை அறிந்துகொள்ளவியலும். வள்ளுவன் எவையெல்லாம் கூடாதென எழுதி யிருக்கிறானோ அவையெல்லாம் அவன் காலத்தில் சமூக பழக்க வழக்கங்களாக இருந்திருக்கின்றன என்பதை யூகிக்க முடியும். எனவே ஒரு படைப்பாளி சமூகத்தின் தேவை கருதியே தன் படைப்புகளை உருவாக்குகிறான்.                   எமக்குத் தொழில் கவிதை                   இமைப்பொழுதும் சோராதிருத்தல் என்று பிரகடனப் படுத்திக் கொண்ட, இருபதாம் நூற்றாண்டின் மகாகவிஞன் பாரதி நம் தேசத்தின் விடுதலையை முன் வைத்துப் பாடல்களை இயற்றினான். அந்நிய ஏகாதிபத்தியத்தின் பிடியில் சிக்குண்டுக் கிடந்த நம் தேசத்தின் சுதந்திரம் அவனுக்குப் பிரதானமாய் இருந்தது. அதனாலே தான்,                   ஆடுவோமே பள்ளுப் பாடுவோமே                   ஆனந்த சுதந்திரம் அடைந்து விட்டொமென்று என்று விடுதலைக்கு முன்னரே குரல் கொடுத்தான். அவனின் தாசன் என்று தன்னை பெயர் சூட்டிக்கொண்ட பாவேந்தன் காலத்தில், தமிழ் மொழிக்கான ஆபத்து பிற மொழி ஆதிக்கத்தால் இருந்த காரணத்தால் தமிழ் குறித்தும் அதன் சிறப்பு குறித்தும் பெரிதும் பாடியதோடு அப

அழைப்பு

Image
அழைப்பு ------------------------------- கூட்ட நெரிசலில் பெற்றோரின் கைநழுவத் தவிக்கும் சிறுமியின் விழிவிசும்பலெனத் துக்கித்த மாலைப் பொழுதை மதுபானக்கடையின் மங்கிய ஒளியில் பருகிக் கொண்டிருக்கிறேன் . எந்த அழைப்பையும் ஏற்கவொண்ணாத அலைபேசியினிந்த மௌனம் அச்சமூட்டுகிறது . சட்டைப் பாக்கட்டிலிருந்து எடுத்துப் பார்க்கிறேன் . வலது மேல் மூலையில்   குண்டூசிச் சிவப்பொளியதன் உயிர் காட்ட அடுத்த அழைப்போ அதற்கடுத்த அழைப்போ உன் மரணத்தை அறிவிக்கக் கூடும் . அந்தச் செய்தியை எதிர் கொள்வது குறித்தும் என்ன பதிலுரைப்பது என்னும் பதற்றத்தையும் சோடாவில் கலந்து பருகும் வேளை தொண்டை வழி இறங்காமல் புரையேறுகிறது . அய்யோ …. மரணத் தறுவாயிலும் என்னைத்தான் நினைத்துக்கொண்டிருக்கிறாயா நீ .