Posts

ஜெயந்தன் நினைவு இலக்கியப் பரிசுப் போட்டி-2014

Image
                                     ஜெயந்தன் நினைவு            இலக்கியப் பரிசுப் போட்டி - 2014            -------------------------------------------   நான்காம் ஆண்டாக நடைபெறும் ஜெயந்தன் நினைவு இலக்கியப் பரிசுப் போட்டிக்கு நூல்கள் வரவேற்கப்படுகின்றன. *நாவல்-நாடகம் ,சிறுகதை, நவீன கவிதை ஆகிய மூன்று பிரிவுகளில், 2013 ஆம் ஆண்டு ( ஜனவரி 2013 முதல் திசம்பர் 2013 வரை) வெளியான நூல்கள் மட்டும் வரவேற்கப்படுகின்றன.எழுத்தாளர்கள்,பதிப்பாளர்கள்,   வாசகர்கள் யாரும் அனுப்பி வைக்கலாம். *ஒவ்வொரு பிரிவிற்கும் தனித்தனியே பரிசுத்தொகை   ரூ 10,000 வழங்கப்படும். *நூல்களின் மூன்று பிரதிகள் அனுப்பவேண்டும். *நூல்கள் வந்து சேரக் கடைசி நாள் 30-04-2014 *அனுப்ப வேண்டிய முகவரி   தமிழ்மணவாளன்   ...

காதலின் மிச்சம்

                                 காலில் குத்திய கருவேலம் முள்ளின் துகளென இதயத்தில் தங்கி இம்சிக்கும் காதலின் மிச்சம். ****      *****   **** என் மீது நீ கொண்டிருந்த காதலை, நானுணர்ந்த தருணம் மிகவும் அபூர்வமானது. அழகானதோர் அந்திப் பொழுதில் நிகழ்ந்த சந்திப்பின் போது, வெட்கம் விழிகளில் சிறகடிக்க முத்தத்துடன் முன் மொழியப்பட்டதல்ல.. சாலை விபத்தொன்றில் சிக்கி அனுமதிக்கப் பட்டிருந்த வென் படுக்கையருகே யாரும் எதிர்பாராவண்ணம் பெருங்குரலெடுத்துக் கதறிய போதுன் விழிகளில் வழிந்த கண்ணீரில்.. ****    ****    **** உன் திருமணத்தில் வாழ்த்த வந்தவர்கள் ஒவ்வொருவராய் உன்னவரிடம் அறிமுகம் செய்கையில் என்னைப் பற்றிச் சொல்ல உன்னிடம் வார்த்தை ஏதுமில்லை உனக்குக் கொடுக்க என்னிடம் பரிசுகள் ஏதுமில்லை.. நம் காதலைத் தவிர. மாறாக, பி...

நந்தா பெரியசாமி என்னும் கலைஞன்: ’அழகன் அழகி’ திரைப்படத்தை முன்வைத்து....

இயக்குனர் நந்தா பெரியசாமி உருவாக்கியிருக்கும் ‘அழகன் அழகி ’ திரைப்படத்தின் ம்டல் பிரதி தயாரானவுடன் பார்க்கிற சந்தர்ப்பம் வாய்த்தது. படம் பார்த்து சிலநாட்களுக்குப் பின்னும், அதன் நினைப்பு மத்தாப்பாய் மனசுக்குள் ஒளிர்ந்துகொண்டே இருக்கிறது. பிடித்தது குறித்து எழுதுவதற்கு எல்லோருக்கும் பிடிக்கும் தானே...எனக்கும் பிடிக்கும்... ‘அழகன் அழகி ’ திரைப்படம் எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது. எனவே அதன் இயக்குனர் நந்தா பெரியசாமி என்னும் கலைஞனை உள்ளத்தில் உயர்த்திப் பிடிக்கிறது. ‘அழகன் யார்..? அழகி யார்..? ’ என்பதைக் கண்டறிய வரும் தொலைக்காட்சி நிர்வாகிகள், அவர்கள் செல்லும் ஊருக்கெல்லாம் நம்மையும் அழைத்துச் செல்கிறார்கள்.அவர்களைச் சந்திக்க வரும் கதாபாத்திரங்களையெல்லாம் நம்மையும் சந்திக்க வைக்கிறார்கள்.அடேயப்பா...!எத்தனைக் கதா பாத்திரங்கள்... ஒவ்வொன்றும், ஒரு சிறப்புச் சிறுகதைக்குத் தகுதி வாய்ந்த புனைவுப் புள்ளிகள்.......புள்ளிகள் தானே கோலத்தில் அடிப்படை.....புனைவுப் புள்ளிகளை வைத்து வண்ணக்கோலம் வரைந்திருக்கிறார்... இயக்குனர் நந்தா பெரியசாமி   படம் தொடங்கியது முதல், Non –stop expre...
Image
வாழ்வியலும் ஆன்மீகமும்: வடிவுடையானின் நூல்களை முன்வைத்து.                                                             வடிவுடையானின்             சற்று மாறுதலாய் யோசி           வாழ்க்கை மாறும்                       தமிழ்மணவாளன் _____________________________________________________________              ’ மாற்றம் ஒன்றுதான் மாறாதது ’, என்பார்கள்.காலத்திற்கேற்ப, சூழ்நிலைக்கேற்ப எல்லாமே மற்றத்தை அடைகின்றன.       ...