Posts

பைசாசம் ----------------------------

                   நூற்றுக்கணக்கானோர் பணியாற்றும் அலுவலகத்தில், மதிய உணவை அவர்கள் இருவரும் சேர்ந்து உண்பது தினப்படி வாடிக்கையாய் இருக்கிறது. சிரித்து மகிழ்ந்த வார்த்தகளினூடாக பிரியாணியின் மணமோ எலுமிச்சை சாதத்தின் சுவையோ …? வழக்கமாய்க் கல்லூரிக்கு அல்லது வேலைக்குச் செல்லுமவள் ஒன்பதரை மணிப்பேருந்தைத்தான் தவறாமல் பிடிக்கிறாள். நடத்துனர் இருக்கை அருகே அவளுக்கென ஒதுக்கி வைக்கிறான் ஒன்றை. எப்போது சந்தித்தாலும் வழியென்றும் பார்க்காமல் அரைமணிநேரம் பேசிச்செல்கிறாள் அவனிடம். சிரிக்கச் சிரிக்கப் பேசுமவனிடம் உரையாடுவதில் குடும்பக் கவலைகூட மறந்து போகிறதாம் அவளுக்கு. ஏதோ ஒ ரு பிரியத்தில் ’ஒருவிஷயம் பேசவேண்டும்’, என பூங்காவிற்கோ கடற்கரைக்கோ வரச்சொன்னவள் அவன் மூன்று சிகரெட் பிடிக்கும்வரை உற்றுப்பார்த்தபடி இருந்துவிட்டு, ‘மகன் டியூஷனில் இருந்து வந்துவிடுவான்’,என அவசரமாய் ஆட்டோவில் ஏறிப்போகிறாள். ஐஸ்கிரீம் பார்லரில் வேலை செய்யும் அச்சிறுவன் வாடிக்க...

இன்குலாப் என்னும் பொதுவுடைமைக் கவிஞன்

Image
இ லக்கியம் காலத்தின் கண்ணாடி.இலக்கியத்தின் வாயிலாக சமூகத்தின் நிலையை அறிந்துகொள்ளவியலும். வள்ளுவன் எவையெல்லாம் கூடாதென எழுதி யிருக்கிறானோ அவையெல்லாம் அவன் காலத்தில் சமூக பழக்க வழக்கங்களாக இருந்திருக்கின்றன என்பதை யூகிக்க முடியும். எனவே ஒரு படைப்பாளி சமூகத்தின் தேவை கருதியே தன் படைப்புகளை உருவாக்குகிறான்.                   எமக்குத் தொழில் கவிதை                   இமைப்பொழுதும் சோராதிருத்தல் என்று பிரகடனப் படுத்திக் கொண்ட, இருபதாம் நூற்றாண்டின் மகாகவிஞன் பாரதி நம் தேசத்தின் விடுதலையை முன் வைத்துப் பாடல்களை இயற்றினான். அந்நிய ஏகாதிபத்தியத்தின் பிடியில் சிக்குண்டுக் கிடந்த நம் தேசத்தின் சுதந்திரம் அவனுக்குப் பிரதானமாய் இருந்தது. அதனாலே தான்,                   ஆடுவோமே பள்ளுப் பாடுவோமே       ...

அழைப்பு

Image
அழைப்பு ------------------------------- கூட்ட நெரிசலில் பெற்றோரின் கைநழுவத் தவிக்கும் சிறுமியின் விழிவிசும்பலெனத் துக்கித்த மாலைப் பொழுதை மதுபானக்கடையின் மங்கிய ஒளியில் பருகிக் கொண்டிருக்கிறேன் . எந்த அழைப்பையும் ஏற்கவொண்ணாத அலைபேசியினிந்த மௌனம் அச்சமூட்டுகிறது . சட்டைப் பாக்கட்டிலிருந்து எடுத்துப் பார்க்கிறேன் . வலது மேல் மூலையில்   குண்டூசிச் சிவப்பொளியதன் உயிர் காட்ட அடுத்த அழைப்போ அதற்கடுத்த அழைப்போ உன் மரணத்தை அறிவிக்கக் கூடும் . அந்தச் செய்தியை எதிர் கொள்வது குறித்தும் என்ன பதிலுரைப்பது என்னும் பதற்றத்தையும் சோடாவில் கலந்து பருகும் வேளை தொண்டை வழி இறங்காமல் புரையேறுகிறது . அய்யோ …. மரணத் தறுவாயிலும் என்னைத்தான் நினைத்துக்கொண்டிருக்கிறாயா நீ .
Image
தேவியின் மரணம் -------------------------- தேவி…. உன் மரணம் செய்தியாக விழுகிறது செவிகளில் முகநூலில் உன்னை ப்ரொஃபைல் படமாக வைத்துக் கடந்துவிட முயல்கிறேன். அத்தனை எளிதில்லை என அப்புறம் தான் தெரிகிறது பெண் என்னும் பேரழகை உணரத்தொடங்கிய பதின்ம வயதில் பக்கம் இருந்த செந்தூரப் பூவாயிற்றே எண்பதுகளின் டொடக்கத்தில் எப்போதும் உடனிருந்தாய் பாசங்குகள் அற்ற பால்யம் உறைந்த உன் குரல் காற்றின் வெளியில் கலந்து கிடந்தபோது தான் வாலிப சுவாசத்தை வரித்த காலம் இதழ் சுழிப்பும் இமை சிமிட்டலும் அழகின் அர்த்தத்தை பிறிதொன்றாக்கின நடிகையின் ரசிகன் எனச்சொல்வதில் ஒரு பெருமையை ஷோபாவுக்குப் பின் உன்னிடம் பெற்றேன் மயிலு மும்பை போனபின் மறந்து போனதென்னவோ உண்மை தான் அதற்காக மரணத்தால் ஞாபகப்படுத்துவது முறையா? இந்த மரணம்  அத்தனை பெரிய கொம்பா ? எல்லாவற்றியையும் அழித்துவிட முடியுமா? ’’ப்ரியா’,’வில் நீ நிற்கும் படமொன்றைப் பென்சில் ஓவியமாய் வரைந்து வைத்திருந்தேன் எண்பதுகளின் ஞாபகங்களோடு எங்கே இருக்கிறதெனத் தேடிக் கொண்டிருக்கிறேன் தேவி. -தமிழ்மணவாளன்...

’கண்ணாடி நகரம்’

Image
(ஜெய தேவனின், ’கண்ணாடி நகரம்’ நூலினை முன் வைத்து) ஜெயதேவன், வெகுகாலமாக கவிதையில் இயங்கி வருபவர். காலந்தோறும் மாறிவரும் கவிதைப் போக்கிலிருந்து விலகி நின்று விடாமல் உடன்  வருபவர். கவிதைகளின் திசைவழிப் பயணத்தில் உற்சாகமாய்ப் பயணிப்பவர். அவரின் அண்மைத் தொகுப்பு,’ கண்ணாடி நகரம்’. கவிதைத் தொகுப்புக்கு முன்னுரை பெறுவது இயல்பானது. ஒன்றுக்கும் மேற்பட்டவர்களிடம் முன்னுரை எழுதச் சொல்வதும் உண்டு. இத்தொகுப்பிற்கு, யவனிகா ஸ்ரீராம், தேவேந்திர பூபதி, அமிர்தம் சூர்யா, சக்தி ஜோதி ஆகிய நான்கு பேர் முன்னுரை வழங்கியிருக்கிறார்கள். சிறப்பு என்னவெனில், கவிதைகளைப் பிரித்து ஒவ்வொரு பகுதிக்கும் ஒவ்வொருவர் முன்னுரை எழுதியிருக்கிறார்கள். இது புது உத்தி. பயன் யாதெனில் ஒரே கவிதையை ஒன்றுக்கும் மேற்பட்டோர் பேசவோ மேற்கோள் காட்டவோ இயலாதவண்ணம் அமைவது. ஜெயதேவன், சமகால அரசியலைத் தன் கவிதைகளின் பாடுபொருளாகக் கொண்டிருப்பது கவனிக்கத்தக்கது. உள்நாட்டு அரசியல் மட்டுல்லாது உலக வல்லாதிக்கத்தின் எதிர் குரலாக எழுதுகிறார். இன்றைக்கு, வளரும் நாடுகளின் பொருளாதாரத்தினை முடிவு செய்வது அமெரிக்க ஏகாதிபத்தியம். உலக வர்...