
Posts
Showing posts from April, 2012
வாழ்வியலும் ஆன்மீகமும்: வடிவுடையானின் நூல்களை முன்வைத்து. வடிவுடையானின் காம சூத்ராவைக் கடந்துவா
- Get link
- X
- Other Apps
எ த்தனை இயல்பாய் இருக்கிறது இரவெல்லாம் புணர்ந்த இந்த உலகம் ’ காமக்கடும்புனல் ’ கவிதைத் தொகுப்பிலுள்ள மகுடேஸ்வரனின் கவிதை வரிகள். காமம் எத்தனை இயல்பான ஒன்று. ஆனால், அது குறித்து இந்த உலகம் எத்தனை பாசாங்கு செய்கிறது என்பதை மிக நேர்த்தியாகச் சுட்டும் வரிகள். உலகில், உயிரினம் தோன்றிய போதே உருவான உணர்வு பசியும் காமமும் தான். ஆம்.காமம் என்னும் இச்சை மட்டும் இல்லாதிருந்திருந்தால் இனப்பெருக்கம் குறித்து எந்த உயிரினமும் கவலைப்பட்டிருக்க வாய்ப்பில்லை. இவ்வுலக இயக்கத்தின் தொடர்ச்சியை உறுதிப்படுத்த இயற்கை உருவாக்கிய உத்தி எனக்கூடத் தோன்றுகிறது. எதிர்பால் ஈர்ப்பென்பது , ‘ முதல் ஆண் -- முதல் பெண் ’ தோன்றிய காலத்திலேயே உருவாகியிருக்கக்கூடும்.அவ்விதமாயின், அதன் காலம் குறித்து நம்மால் ஒருவாறு கணிக்க இயலும்.காமம் பற்றியும், காம சாஸ்திரம் பற்றியும் நம் முன்னோர் எவ...