Posts

Showing posts from June, 2017

இன்று என் பிறந்தநாள்

                     ------------------------------------------ இன்று என் பிறந்தநாள். நள்ளிரவு தாண்டி இந்த நாள் ஆரம்பிக்க, மனைவி தொடங்கி மகன்கள் தொடர்ந்து உறவுகள் நண்பர்கள் அலுவலகத் தோழமைகள் கலை இலக்கிய ஆளுமைகள் முக நூல் நண்பர்கள் எனப் பலரும் வாழ்த்துத் தெரிவித்தனர்.எல்லோருக்கும் என் இதயம் கனிந்த நன்றிகளை உரித்தாக்கிக் கொள்கிறேன். பிறந்த நாளின் போது எனக்கு வாழ்த்துச் சொல்வதற்காக ஒருவர் மேற்கொள்ளும் மெனக்கெடல் மிகுந்த நெகிழ்ச்சியை உருவாக்குகிறது. நேரிலும் தொலைபேசி மூலமும் குறுஞ்செய்தி வாயிலாகவும் மின்னஞ்சல் பகிரி மெஸெஞ்சர் வழியும் வழியும் அன்பை என்னென்பது.வாழ்த்துவதற்கு செலவிடும் வார்த்தைகள் வெறும் வார்த்தைகள் அல்ல. அவர்களின் எண்ணமும் மகிழ்ச்சியுமல்லவா. அலுவலகத்தில் ஐஸ்கிரீம்  குளிர்ச்சியோடு வாழ்த்தினார்கள். இவற்றினூடாக, இந்தப் பிறந்த நாளில் பிரத்யேகமாக சிலரிடம் வாழ்த்துப் பெற மனம் விழைந்தது. வடசென்னைப் பகுதியில் மாதவரம், மாத்தூரில் இருந்து ஞாயிறு செல்லும் சாலையில் பெருங்காவூர் என்னும் கிராமத்தில் இயங்கும், ‘உயிரொளி’ முதியோர் இல்லத்தில் என்னைப் பெறாத பெற்றோராய் இருப்பவ

நிதர்சனத்தின் விரல் பிடிக்கும் வரிகள்

Image
( தமிழ்மணவாளனின், ‘உயிர்த்தெழுதலின் கடவுச் சொல்’, கவிதை நூலினை முன் வைத்து )                                     - வேதநாயக்     1992 லிருந்து 2016 வரை 8 புத்தகங்கள் . இந்த உயிர்த்தெழுதலின்   கடவுச் சொல் வரை 5 கவிதை தொகுப்புகள் , தமிழின் ஆளுமைக் கட்டுரைகள் ஒன்று , நூல் விமர்சன கட்டுரை நூல் ஒன்று , நவீன தமிழ் கவிதைகளின் நாடக கூறுகள்   பற்றிய காலமும் வெளியும் என்ற ஆய்வு நூல் ஒன்று என கால் நூற்றாண்டாக இயங்கி வரும் தமிழ் மணவாளன் அவர்களின் இந்த உயிர்த்தெழுதலின் கடவுச் சொல் நூல் வெளியீட்டின் சார்பாக சில வார்த்தைகள் . அழகான வடிவமைப்புடன் படி வெளியீடாக ( டிஸ்கவரி புக் பேலஸ் ) உயிர்த்தெழுதலின் கடவுச் சொல் வெளிவருவதற்கு வாழ்த்துகள் . அவரது வார்த்தைகளிலிருந்தே துவங்கலாம் என்று நினைக்கிறேன் . உடன்பாட்டுக்கான எந்த சொற்களுமில்லை யெனினும்   உரையாடல் இடையறாது நிகழ்கிறது வாசகனுக்கும் படைப்பாளிக்கும் இடையே இருப்பதாக நினைக்கப்பட்ட , நினைக்கின்ற தூரத்தை குறைத்திருக்கிறார் என இவ்வரிகளிலேயே நினைக்க வைத்து விடு