இது உன் கவிதை



என் எல்லைக் கோட்டை அறிந்திருக்கிறாய்

என் மெளனத்தின் முழு அர்த்தமும்

புரிந்து கொண்டிருக்கிறாய்

மெல்ல மழைதூறிக்கொண்டிருந்த மாலை

உன் வருகை சந்தோஷமாய் இருந்தது

ஆயினும்

தொடர்ந்ததன் அச்சம் தவிர்க்கவியலாததாய்

இருக்கிறது.உன்

நினைவுகள் என்னை மேலும்

சலனப்படுத்துகிறது.

வெறுப்பின்றி, விருப்பங்கொள்ளவியலாமல்

மனத்தின் ஆழம்

மின்னலாய்த் தோன்றும் மகிழ்ச்சியினூடே

செவிகிழிக்கும்

பேரிடி ஓசை அதிர்கிறது.

உனக்கொன்றும் விளங்காமலில்லை

எனவே தான்

என் கவிதையை நீயெழுதுகிறாய்

நீயும் நானும் வேறல்ல.

Comments

  1. நானும் நீயும் வேறல்ல என்று முடித்து இருந்திர்கள் .நான் என்பது தாங்கள் புரிகிறது . நீ என்பது யார் என்பது புரியவில்லை?.அது தாயா,தாரமா,நண்பனா ,விளக்கவும்.?.

    valthungal.blogsopt.com. n.ravindran. manaprai.

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

இன்குலாப் என்னும் பொதுவுடைமைக் கவிஞன்

ஏற்புரை--தமிழ்மணவாளன்

தை முதல்நாளே தமிழர் புத்தாண்டு