யதார்த்தம்

எதைக் காய்ச்சி வடிக்கிறாய்
இத்தனை அடர்த்தியாய்
அகங்காரத்தை

தொடர்ந்த இறுக்கம்
சமாதியாக்கும்
மனத்தைப் புதைத்து

உதிரும் பூக்களாயினும்
அடுத்தடுத்து
உருவாகும் மொட்டுகள்
உயிர்த்தலின் அடையாளம்

இருக்கட்டும் தவறில்லை
என்றாலும் கூட
இயல்புதான் வாழ்க்கை

நினைவின் நிகழ்ச்சிகளன்று
நிஜம்  வேறாக

போவது போய்க்கொண்டிருக்கிறது
வருவது வந்து கொண்டிருக்கிறது
தடுப்பதற்கில்லையெதையும்

அவ்வளவு எளிதாய்
காணக்கிடைப்பதில்லை
கனவுகளின் சாம்ராஜ்யம்.

Comments

 1. உதிரும் பூக்களாயினும்
  அடுத்தடுத்து
  உருவாகும் மொட்டுகள்
  உயிர்த்தலின் அடையாளம்

  சத்தான வார்த்தைகள் ,முத்தான கவிதை ,படித்தேன் ,ரசித்தேன் .
  மணப்பாறை மண்ணை மறக்காத நெஞ்சை மறக்கவில்லை நானும்.

  ரவீந்திரன்.மணப்பாறை.

  .

  ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

குப்பை பற்றி ஒரு கவிதை

அசரிரீ சொன்ன பொய்

மரத்தின் நிழல்’