சுவருக்கு அப்பால்

இந்தச்
சுவர்கள் பொல்லாதவை

எத்தகைய விஷயங்களையெல்லாம்
மறைத்து விடுகின்றன
இந்தச் சுவர்கள்

இவற்றின் மீது தான் எத்தனை
மரியாதை வைத்து,
வாழ்வின் சித்திரங்களையெல்லாம்
வரைந்து வைக்கிறோம்

நம்முடனேயே நகர்ந்து வருகின்றன
சில சுவர்கள்

திடீரென முன் வந்து 
மறித்து நிற்கையில்
கடவுளரையே தாங்கும்
அவற்றின் மீதான
மீதான அச்சம் தவிர்க்க முடிவதில்லை

எப்போதும்
மறைத்து நிற்கும் சுவர்களின்
அந்தப் புறத்தை
அறிந்து கொள்வதில்
ஆர்வம் குறைவதே யில்லை

இந்தச்
சுவர்கள் பொல்லாதவை
வாய் திறந்து பேச முடியவில்லை,
காதுண்டு என்பதால் மட்டுமல்ல
சுவருக்கப்பால்
யாதுண்டு வெனவறியாத வரைக்கும்

Comments

Popular posts from this blog

குப்பை பற்றி ஒரு கவிதை

அசரிரீ சொன்ன பொய்

மரத்தின் நிழல்’