கதவு

குரல் கொடுத்துக்
காத்திருந்ததுண்டா இறுகப் பூட்டிய
கதவின் வெளிநின்று....?
உள்ளிருத்தலை
நிச்சயப்படுத்த வியலாது
திறந்த கதவு தள்ளி நுழைய,
எத்தனிக்கும் வன்மம் தரும்
அச்சுறுத்தல் தாழ்ப்பாளாய்
அடைத்த பொழுதுகளில் நின்று
திரும்பிவிடும்
திறந்துவைத்துஎதிர்நோக்குக்
குரியவையும்
பௌதீக வடிவமற்றுத் தவிர்க்கும்
பிறிதுணரச் சாத்தியமற்று
இட்டுச் செல்லும்
இடர்பயணம்
அசோகவனம் வரை நீளும்
உடைத்த கதவிடை உருவான
பெருவழியில்.

Comments

Popular posts from this blog

குப்பை பற்றி ஒரு கவிதை

அசரிரீ சொன்ன பொய்

மரத்தின் நிழல்’