பரமேஸ்வரியின் வாழ்க்கைக் குறிப்புகள்குருமூர்த்தியின் மகளாய்ப் பிறந்தாள்
பரமேஸ்வரி. செல்ல மகளாய்
வளர்ந்தாள். கல்யாணம் நடந்தபோது
தனபாலனின் தங்கை.
புகுந்தவீட்டில் எப்போதுமவள்
மணிகண்டன் மனைவிதான்.
பிள்ளைப்பேறு அவளை
குமார் அம்மாவாக்கியது.
பின்னிரவுப் பொழுதொன்றில்
கடந்த வாரம் தன் எண்பத்திமூன்றில்
காலமானாள் சதீஷ் பாட்டியாக.
பரமேஸ்வரி ஒருபோதும்
பரமேஸ்வரியாய் அடையாளம் காணப்பட்டதாக
அவளின் வாழ்க்கைக் குறிப்புகளில்
தடயங்களேதுமில்லை.
                 தமிழ்மணவாளன்

Comments

Popular posts from this blog

குப்பை பற்றி ஒரு கவிதை

அசரிரீ சொன்ன பொய்

மரத்தின் நிழல்’