என்னைப் போல் ஒருவன்


என்னைப் போலவே ஒருவனைப்
பார்த்ததாகச்
சொல்லிக் கொண்டிருந்தான்
அவன்.

அந்திமயங்கும் நேரம்
போதையின் உச்சத்தில்
ஹீரோ ஹோண்டாவை ஸ்டார்ட் பண்ண
முயற்சித்து முயற்சித்து
முடியாமல்
வண்டியோடு விழுந்தவனைப் பற்றித்தான்
சொல்லிக் கொண்டிருந்தான்
அவன்.

கடந்து போன பேருந்திலிருந்து
கவனித்தபோது
கன்னிமாரா நூலக வளாகத்திலிருந்து
வெளிவந்தவனை
நானென எண்ணிக் குரல் கொடுத்திருக்கிறான்
இவன்.

என்னைப்போலவே
காணப்பட்டவர் இருந்தார்களாவென
உறுதிப்படுத்தவியலாதாயினும்

இருக்கின்றனர்
நிச்சயமாக இவர்கள்
அவனைப் போலவே அவனும்
இவனைப் போலவே இவனும்.

Comments

Popular posts from this blog

குப்பை பற்றி ஒரு கவிதை

அசரிரீ சொன்ன பொய்

மரத்தின் நிழல்’