தேர்வு

                         
                                                  தேர்வு
பகிரியில் உனக்கு வணக்கம் சொன்னவர்கள் குறித்து
பரிகாசம் செய்கிறாய்
உன்மொழி தெரியாமல் தொடர்பில் வரும்
அவர்களின் அறியாமை குறித்து
அதிருப்தி கொள்கிறாய்.
பொறுக்க்வியலாமல் பொது வெளியில்
 பதிவு செய்கிறாய்.
மேன்மைமிகுமுன் மொழியினைப்
பிரகடனப் படுத்துகிறாய்.
உன் நுட்பமான சல்லடைத் துவாரத்தின் வழி
சலிக்கத் தொடங்கும் போதில்
எதன் பொருட்டோ பலரைக் கழிக்கிறாய்
எதன் பொருட்டோ சிலரை இணைக்கிறாய்

 சலித்ததில்.

Comments

Popular posts from this blog

குப்பை பற்றி ஒரு கவிதை

அசரிரீ சொன்ன பொய்

மரத்தின் நிழல்’