தமிழ்மணவாளன் கவிதை:

ன்னைப் பற்றி யாரேனு
மேதேனும் கூறும் போதுடனே
யென்னுள் எழும் பதற்றத்தையும்
உண்டாகும் நடுக்கத்தையும் கொண்டென்னுள்
ளுன்றன்பால் எனக்குள்ள
அன்பின் அதிதீவிரத்தைப்
புரிந்து கொள்கிறார்கள்.

மேலும் எழும் பேச்சாலுருவாகும்
ரணத்தை மறைத்த போதிலுமூறித்
 ததும்பிச் சொட்டும் துயரத்தின்
இரத்தத்தைத் தம் கள்ள நாக்கினால்
நக்கிச் சுவைக்கிறார்கள்.

குருதி சுவையறிந்தோர்
குதறாமல் விடமாட்டார்கள்
என்பதுணர்ந்து
‘அனிஸ்தீஷியா’ கொடுத்த மனசாய்
எண்ணம் மயங்கி இறந்து கிடக்கிறேன்.

நீயோ மெல்லக் கையசைத்து
புன் முறுவலித்தபடி
கடந்து போகிறாய்

உன் வாழ்க்கையை நீ வாழ்வதாய்ச் சொல்லி.

Comments

Popular posts from this blog

இன்குலாப் என்னும் பொதுவுடைமைக் கவிஞன்

ஏற்புரை--தமிழ்மணவாளன்

தை முதல்நாளே தமிழர் புத்தாண்டு