தமிழ்மணவாளன் கவிதை:இரவின் சம்பாஷணை

                                                              ---தமிழ்மணவாளன்


இரவின் சம்பாஷணை

ளிபுகவியலா வடர்ந்த மரங்களின்
வனத்துள் தனிமை அச்சம் போக்க
தன் துணை தேடி அரற்றிக் கொண்டிருக்கிறது
பெயரறியா சிறு பூச்சி
நிலவினை ஒளித்து வைத்தால் இரவின் சம்பாஷணையை
இருள் மொழிகூட்டி
நிகழ்த்தலின் சாத்தியத்தை யாரோ சொல்ல
உரையாடலின் விழிகளை
சன்னல் கதவுகள் அடைக்கும்
பொறாமையின் அடர் கறுப்பாய் காற்றின்
அரூப மேனியெங்கும் உலர்ந்திருக்க
சம்பாஷணையின் சொற்கள்
மூச்சுப்பயிற்சி செய்யத் தொடங்கும்
யெதிர்த் திசைப் போகும் புகைவண்டியில்
மறைக்கும் கணநேர முகமென
அதிர்ந்த மின்னொளிக் கீற்றில்
வார்த்தைகளின் உஷ்ணமாய் குழம்பென வழியும்
காமத்தின் நா நழுவிக் குழறும்

இரவின் சம்பாஷணை

Comments

Popular posts from this blog

இன்குலாப் என்னும் பொதுவுடைமைக் கவிஞன்

ஏற்புரை--தமிழ்மணவாளன்

தை முதல்நாளே தமிழர் புத்தாண்டு