இன்குலாப் என்னும் பொதுவுடைமைக் கவிஞன்
இ லக்கியம் காலத்தின் கண்ணாடி.இலக்கியத்தின் வாயிலாக சமூகத்தின் நிலையை அறிந்துகொள்ளவியலும். வள்ளுவன் எவையெல்லாம் கூடாதென எழுதி யிருக்கிறானோ அவையெல்லாம் அவன் காலத்தில் சமூக பழக்க வழக்கங்களாக இருந்திருக்கின்றன என்பதை யூகிக்க முடியும். எனவே ஒரு படைப்பாளி சமூகத்தின் தேவை கருதியே தன் படைப்புகளை உருவாக்குகிறான். எமக்குத் தொழில் கவிதை இமைப்பொழுதும் சோராதிருத்தல் என்று பிரகடனப் படுத்திக் கொண்ட, இருபதாம் நூற்றாண்டின் மகாகவிஞன் பாரதி நம் தேசத்தின் விடுதலையை முன் வைத்துப் பாடல்களை இயற்றினான். அந்நிய ஏகாதிபத்தியத்தின் பிடியில் சிக்குண்டுக் கிடந்த நம் தேசத்தின் சுதந்திரம் அவனுக்குப் பிரதானமாய் இருந்தது. அதனாலே தான், ஆடுவோமே பள்ளுப் பாடுவோமே ...
Comments
Post a Comment