அழைப்பு


அழைப்பு
-------------------------------
கூட்ட நெரிசலில் பெற்றோரின் கைநழுவத் தவிக்கும்
சிறுமியின் விழிவிசும்பலெனத் துக்கித்த
மாலைப் பொழுதை
மதுபானக்கடையின் மங்கிய ஒளியில்
பருகிக் கொண்டிருக்கிறேன்.

எந்த அழைப்பையும்
ஏற்கவொண்ணாத அலைபேசியினிந்த
மௌனம் அச்சமூட்டுகிறது.

சட்டைப் பாக்கட்டிலிருந்து
எடுத்துப் பார்க்கிறேன்.வலது மேல் மூலையில்
 குண்டூசிச் சிவப்பொளியதன்
உயிர் காட்ட
அடுத்த அழைப்போ அதற்கடுத்த அழைப்போ
உன் மரணத்தை அறிவிக்கக் கூடும்.

அந்தச் செய்தியை
எதிர் கொள்வது குறித்தும்
என்ன பதிலுரைப்பது என்னும் பதற்றத்தையும்
சோடாவில் கலந்து பருகும் வேளை
தொண்டை வழி இறங்காமல்
புரையேறுகிறது.

அய்யோ….மரணத் தறுவாயிலும்
என்னைத்தான்
நினைத்துக்கொண்டிருக்கிறாயா நீ.

Comments

Popular posts from this blog

இன்குலாப் என்னும் பொதுவுடைமைக் கவிஞன்

ஏற்புரை--தமிழ்மணவாளன்

தை முதல்நாளே தமிழர் புத்தாண்டு