கவிநுகர் பொழுது-16 ----------------------------------------------------- தமிழ்மணவாளன் ------------------------------------------------------------------------------------------------------------------------------- ( கவிஞர் பிருந்தாசாரதியின்,’எண்ணும் எழுத்தும்’, நூலினை முன்வைத்து) ------------------------------------------------------------------------------------------------------------------------------- ’ எண்ணும் எழுத்தும் கண்ணெணத் தகும்’, என்பது ஔவை மொழி. ’எண்ணும் எழுத்தும் கவிதையெனத் தகும்’, என்கிறார், தன் புதிய தொகுப்பான, “எண்ணும் எழுத்தும்’, மூலமாக பிருந்தா சாரதி.ஒன்றைச் செய்வது எவ்வளவு சிறப்போ அதனினும் பன்மடங்கு சிறப்பானது அதனைத் தொடங்குவது. பெரிதகன்று வெள்ளப் பெருக்கெடுத்தோடும் நதியின் பிறப்பு சிற்றூற்றாய் இருப்பினும் அதுவே மூலம். அதுவே வணக்கத்திற்குரியது. அத்தகைய தொடக்கம், இந்த எண் வழிக் கவிதைகளுக்கு எவ்வா...